Who We Are?

A HISTORICAL VIEW OF THE GREAT MUHALLAH MUSLIM JAMA-ATH.

 

​* The first and foremost Jama-ath in Ramanathapuram which includes vetrilaikaraPattarai, Kasai Pattarai, Aruppukkara Pattarai, Pachai Valayalkara Pattarai, Kollam Pattarai, and Ambalam Pattarai.

​* For administrative purpose, Jama-ath began to function as many names, Periya Muhalla Jama-ath was the principal of all Jama-aths.

​* Periya Muhallam Muslim Jama-ath affected town Maiawadipalli was built by our forefathers in 1773 – 1774 and has been preserved till today for 250 years.

​* Later, a Mosque was built in 1870 on a tiled roof at Pallivasal Street in Velipattinam, Chinnakkadai.

​* In this case, Syed Muhamed Rahmathullahi AliarAllama Columbu Alim, was born to UdumanMaraikayar, who migrated from Karaikaal.  After he went to Srilanka in 1850 in a Village called Walakama.

​* He CAME TO Tamil Nadu in 1898 and took charge of Devipattinam Madarsat Madalipun HyrathMadarasa and worked for sometime.

​* They travelled allover Tamil Nadu on foot and taught Deen Education to Islamic Children.  They established more than 600 Madarsa and Mosques in South Tamil Nadu.

​* In 1910, Columbu Alim Vappa established Madarasa at Ottadukkupalli, Pallivasal Street, Velipattinam, Ramanathapuram.

​* And also, This Muslim Primary School was started by him.  Later it was expanded and constructed as Columbu Alim Memorial High School and Crescent Matriculation School which are progressing well.

​* About 900 students are studying in Muslim Primary School and Columbu Alim Memorial High School.  Around 300 are studying in Crescent Matriculation School with secular and religious education.

​* Out of 1200 students, 600 Muslim students can come to offer prayers.  By the grace of Allah! The Madarasa has been running for 115 years.  All the above schools are well run by our Jama-ath with disciplined classroom teaching till now.

​* MuslimPrimary Shool is functioning as a Government aided school from 1st to 5th Standard.  The Government is paying only for the teachers.  But theother expenditure required to run the school is about 3 lakhs per year.

​* Columbu Alim School teachers are getting salary only from 6th to 8th Standard with government financial assistance.  9th and 10th classes are run by Jama-ath and the salary of 9th and 10th is spent upto 10 lakhs per annum.  And other expenses are being spent upto 4 lakhs per annum.

​* Every Year, Columbu Alim School students are passing 100 percent for 30 years in this school . Most of  students become graduates from this school as  engineers, doctors and teachers.

​* Jama-atars are trying hard to make ColumbuAlim School, a secondary school now. For this, there is a demand of upto 15 lakhs species per year.

​* Periya  Muslim Jama-ath controls periya muhallamuslim jama-ath mosque, Periya MuhallaKabarasthan Mosque and Madi Mosque jumma.  Soour Jama-ath has given salary to Aalim and Modhinar.  And also, other expenditures are costed by our jama-ath only.

​* The income for the Periya Muhallam Jama-ath is only marriage and the rent of 4 shops.  Schools are being run based on this.  In some circumstances money is being collected from rich people who help foreducation in the situation of scarcity.  All the proceeds of Jama-ath are spent entirely on the education of the students.

​* This Mosque again renovated in 1960 and later it expanded.  During the rainy season, rain water is coming inside the Mosque building.  There are also many cracks on it.  There is difficult situation in conducting prayer.

​​* There are 4500 Mahalla residents in our Muhalla.  There are also financial difficulties in managing the madarsas and schoolsrun by them.

​* For the educational welfare of the people of our society for various difficulties, we are running schools in the middle.

​* A unanimous decision has been taken by the Periya Muhallam Muslim Jama-ath to demolish the dilapidated school and build a new mosque.

​* As there are not many wealthy people in our Jama-ath, we are forced to demolish the mosque and start the construction work of a new mosque.

​* On behalf of our jama-ah, we kindly request you to donate more to the school of Allah and we kindly ask you to  help in the construction of the new building.


‎بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் வபாரிக் வஸல்லிம் அலைஹி.

பெரிய முஹல்லம் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாக மன்றம்.

ஒரு வரலாற்றுப் பார்வை

இராமநாதபுரத்தில் முதல் ஜமாஅத்தாகவும் பல பட்டறைகளை உள்ளடக்கிய அதாவது வெற்றிலைகாரப்பட்டறை,
கசாய் பட்டறை, அரிப்புகாரப்பட்டறை, பச்சை வளையக்காரப்பட்டறை, கொல்லம் பட்டறை, அம்பலம் பட்டறை என்ற பெயரில் தொழில் செய்த வகையறாக்கள் உள்ளடக்கிய ஒன்றுபட்ட ஒரே குடையின் கீழ் இருந்து வந்த பழமை வாய்ந்த ஜமாஅத்தாகும்.

காலப்போக்கில் நிர்வாக வசதிக்காக பல பெயர்களில் ஜமாஅத்தின் நிர்வாகங்களாக இயங்க ஆரம்பித்தாலும் எல்லா ஜமாஅத்துகளுக்கும் மூலமாக இருந்து வந்தது பெரிய முஹல்லம் முஸ்லிம் ஜமாஅத்.

பெரிய முஹல்லம் முஸ்லிம் ஜமாஅத்திற்கு பாத்தியப்பட்ட டவுன் மையவாடிப்பள்ளி கிபி 1773 -74 ஆண்டு நம் முன்னோர்களால் கட்டப்பட்டு இன்றளவும் (250 வருடங்களாக) பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பிற்பாடு வெளிப்பட்டிணம் சின்னக்கடை பள்ளிவாசல் தெருவில் கிபி 1870 ம் ஆண்டு நாட்டு ஓடுகளால் மேயப்பட்ட ஓட்டடுக்குகளாக ஓட்டடுக்கு பள்ளி கட்டப்பட்டது.

இந்நிவையில் காரைக்காலிலிருந்து இடம்பெயர்ந்து இலங்கை சென்ற உதுமான் மரைக்காயர் அவர்களுக்கு கிபி 1850 ஆம் வருடம் இலங்கையில் உள்ள வலக்காமா என்ற கிராமத்தில் அல்லாமா கொழும்பு ஆலிம் என்ற சைய்யீத் முஹம்மது ரஹ்மத்துல்லாஹி அவர்கள் பிறந்தார்கள்.

1898 ஆம் ஆண்டு தமிழகம் வந்து தேவிப்பட்டினம் மதரசத்துள் மதலீபுன் ஹைராத் மதரஸாவில் பொறுப்பேற்று சிறிது காலம் பணியாற்றினார்கள்.

தமிழகம் முழுவதும் கால்நடையாகவே பயணித்து இஸ்லாமிய குழந்தைகளுக்கு தீன் கல்வியை போதித்தார்கள். தென் தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட மதரசாக்கள் மற்றும் பள்ளிவாசல்களை நிறுவினார்கள்.

கொழும்பு ஆலிம் அவர்கள் 1910 இல் இராமநாதபுரம் வெளிப்பட்டிணம் பள்ளிவாசல் தெருவில் ஒரு மதரசாவை நிறுவினார்கள். அல்லாஹ்வின் பேரருளால் இன்றளவும் சுமார் 115 ஆண்டுகளாக மதரஸா நடைபெற்று வருகிறது.

மேலும் இதன் தொடர்ச்சியாக முஸ்லிம் தொடக்கப் பள்ளி அன்னாரால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்டு கொழும்பு ஆலிம் நினைவு உயர்நிலைப் பள்ளியாக மற்றும் கிரசன்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகவும் கட்டமைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

முஸ்லிம் தொடக்கப் பள்ளி மற்றும் கொழும்பு ஆலிம் நினைவு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 900 மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.
கிரசன்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுமார் 300 மாணவர்கள் உலகக் கல்வி மற்றும் மார்க்க கல்வியுடன் கல்வி பயின்று வருகிறார்கள். இப்பள்ளிகளில் பயின்றுவரும் 1200 மாணவர்களில் 600 இஸ்லாமிய மாணவர்கள் தொழுது வரக்கூடிய பள்ளிவாசலாகவும் உள்ளது.

இப் பள்ளிவாசல் கட்டிடம் ஆனது 1960 ஆம் ஆண்டு மீண்டும் புனரமைக்கப்பட்டு பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்டது. மிகப் பழைய கட்டிடமான இப்பள்ளிவாசலில் தற்போது மழை காலங்களில் மழை நீர் கட்டிடத்திற்குள் இறங்கி வருகிறது. அதிகமான விரிசல்களும் ஏற்பட்டு உள்ளது. இதனால் தொழுகை நடத்துவதில் மிகவும் சிரமமான சூழல் நிலவி வருகிறது.

பழுதடைந்த இப்பள்ளியை இடித்து புதிய பள்ளிவாசலை கட்டலாம் என பெரிய முஹல்லா முஸ்லிம் ஜமாஅத்தினரால் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எமது மஹல்லாவில் 4500 மஹல்லாவாசிகள் உள்ளனர். ஜமாஅத்தினரால் நடத்தி வரக்கூடிய மதரஸா மற்றும் பள்ளிக்கூடங்களை நிர்வகிப்பதிலும் பொருளாதார ரீதியான சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது.

நம் சமுதாய மக்களின் கல்வி நலனுக்காக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பள்ளிக்கூடங்களை நடத்தி வருகிறோம். எங்கள் ஜமாஅத்தில் பொருளாதார நிலையில் வசதியுள்ள தனவந்தர்கள் அதிகம் இல்லாத நிலையில் தற்பொழுது பள்ளிவாசலை இடித்து புதிய பள்ளிவாசலின் கட்டிடப் பணிகளை ஆரம்பிக்க வேண்டிய கட்டாய சூழலில் இருந்து வருகிறோம்.

அல்லாஹ்வினுடைய பள்ளிக்கு அதிகமான நன்கொடை அளித்து புதிய பள்ளிவாசல் கட்டிடம் கட்ட உதவி செய்யுமாறு எங்கள் ஜமாஅத்தின் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

————————————————

COMMITTEE MEMBERS:

Jama-ath President ​- ​+91 9940900688
Jama-ath Secretary​ – +91 ​9443209123
Jama-ath Treasurer – ​​+91 8807506237

Donate Now:
Name: PERIYA MUHALLAH MUSLIM JAMAATH NIRVAGA MANDRAM
Bank: Canara Bank
Account Number: 2808101000938
IFSC Code: CNRB0002808
MICR Code: 623015002
Branch: Ramanathapuram – 623501

Masjid Address:
PERIYA MUHALLAH MUSLIM JAMAATH NIRVAGA MANDRAM,
Pallivasal Street, Velipattanam,
Ramanathapuram – 623 504